» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயிலில் நாளை தைப்பூசத் திருவிழா : பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்
சனி 31, ஜனவரி 2026 8:05:24 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை (பிப். 1) நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் கைகளில் பச்சை நிற அடையாள வில்லை (டேக்) கட்டப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை தைப்பூசத்தை முன்னிட்டு பிப். 1ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 8.30 மணிக்கு தீர்த்தவாரி, 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெறுகிறது.
தொடர்ந்து, சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்குச் செல்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன. தொடர்ந்து, சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து, பின்னர் திருக்கோயில் சேர்கிறார்.
தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு அதிகளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். நெடுந்தூரத்திலிருந்து வரும் பக்தர்கள் கோயிலில் விரைவாக சுவாமி தரிசனம் செய்வதற்காக, கோயில் முகப்பில் திருவாவடுதுறை கந்த சஷ்டிவிழா மண்டபத்தில் இருந்து கம்பிகளாலான தடுப்புகள் கொண்டு தனி வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜன. 31) சனிக்கிழமை முதல் அவ்வழியில் பாதயாத்திரை, காவடி, பால்குடம், அலகு குத்தி வரும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படவுள்ளனர். மேலும், பாதயாத்திரை பக்தர்களின் கைகளில் அடையாள வில்லை கட்டப்படுகிறது. ஏற்பாடுகளை தக்கார் ரா. அருள்முருகன், இணை ஆணையர் க. ராமு, கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









