» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வியாபாரி வெட்டிக் கொலை: நண்பர் வெறிச்செயல்!

சனி 31, ஜனவரி 2026 8:00:29 AM (IST)

கோவில்பட்டியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வியாபாரியை வெட்டிக் கொன்ற அவரது நண்பர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த சேதுராமன் மகன் மாரீஸ்வரன் (43). கோலப்பொடி வியாபாரம் செய்து வந்தார். இவர் வீட்டின் அருகே வாசிப்பவர் முத்தையா மகன் ராமசாமி (75). கூலித் தொழிலாளியான இவரும், மாரீஸ்வரனும் நண்பர்களாக பழகி வந்தனர். 

இருவரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்று மாலை வழக்கம்போல் இருவரும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ராமசாமி அரிவாளை எடுத்து மாரீஸ்வரனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மாரீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து ராமசாமி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் மாரீஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து தப்பி ஓடிய ராமசாமியை போலீசார் தேடி வந்தனர்.

ஆனால் அதற்குள் அவர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சரண் அடைந்தார். ராமசாமி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory