» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் பிடிவாரண்ட் : தலைமறைவாக இருந்து வந்த நபர் கைது!

வெள்ளி 30, ஜனவரி 2026 8:36:24 PM (IST)

கழுகுமலை பகுதியில் நடந்த கொலை வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து 5 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கழுகுமலையை சேர்ந்த சாமிநாதன் (38) என்பவரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (PCR Court) நடைபெற்று வந்த நிலையில் சாமிநாதன் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனால் கடந்த 16.09.2025 அன்று மேற்படி நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்தையடுத்து போலீசார் தொடர்ந்து சாமிநாதனை தேடிவந்தனர்.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நை. சிலம்பரசன்  உத்தரவின்படி கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர்  தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு 5 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த சாமிநாதனை இன்று கைது செய்து சிறையிலடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory