» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கஞ்சா ஆயில் வைத்திருந்த 7பேர் கைது : கார், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

வெள்ளி 30, ஜனவரி 2026 8:34:02 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா மற்றும் கஞ்சா ஆயில் வைத்திருந்த 7பேரை போலீசார் கைது செய்தனர். 150 கிராம் கஞ்சா, 12 கிராம் கஞ்சா ஆயில் மற்றும் ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடியில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன் தலைமையில் சார்பு ஆய்வாளர் முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது கோமஸ்புரம் பகுதியில் கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களுடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அதி்ல் அவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களான காசிமுனியசாமி (30), ஜோ பிரகாஷ் (43), மரிய மைக்கேல் திணேஷ் (27), இசக்கிபாலன் (25), பால சசிகுமார் (20), ஜோ கிங்ஸ்டன் (27), சிலுவை பீட்டர் விமல் (44) மற்றும் ஒரு இளஞ்சிறார் என்பதும் கஞ்சா மற்றும் கஞ்சா ஆயில் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 7பேரையும் கைது செய்தும், ஒரு இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா, 12 கிராம் கஞ்சா ஆயில் மற்றும் ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுபோன்று கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory