» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டுகள்: நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 8:28:38 PM (IST)
தூத்துக்குடியில் பள்ளி மாணவியை கேலி கிண்டல் செய்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் வாலிபருக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து இளஞ்சிறார் நீதிக்குழுமம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் சீனிவாசா நகரை சேர்ந்த சிறுவன். இவர் அங்குள்ள ஒரு 14 வயது பள்ளி மாணவியை தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி கடந்த 25-9-2012 அன்று வீட்டில் யாரும் இல்லாத போது மண்ணெண்ணை உற்றி தீக்குளித்து விட்டார். இதனால் பலத்த தீக்காயம் அடைந்த அந்த மாணவியை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் 29-9-2012ல் சிகிச்சை பலனின்று இறந்தார். இது குறித்து அந்த சிறுவன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை இளஞ்சிறார் நீதிக்குழும முதன்மை நடுவர் எஸ்.பாக்கியராஜ், உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் நடந்துவந்தது.
விசாரணையில் அரசு தரப்பில் போதிய ஆதாரங்களுடன் சிறுவன் மீதான குற்றம் நிருபிக்க பட்டதால் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் தண்டனை விதித்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த சிறுவனுக்கு (தற்போது 27 வயது). அவர் தென்காசி பகுதியில் வசித்து வருவதால் தென்காசியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களுக்கு 3 ஆண்டுகள் சேவை செய்ய வேண்டும் என்றும், தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் அவர் இந்த சமுதாய சேவையில் ஈடுபட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பு கூடுதல் வழக்கறிஞர் முருகபெருமாள் ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)










BabuJan 31, 2026 - 10:00:31 AM | Posted IP 104.2*****