» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!

வெள்ளி 30, ஜனவரி 2026 7:50:35 PM (IST)



தூத்துக்குடியில்  ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

ஜனவரி மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கப்படுவதையொட்டி, ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி இன்டராக்ட் சங்கம் சார்பில் ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட்ஸ் மற்றும் சாலை பாதுகாப்புப் படை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, சாலை பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த பேரணியை தூத்துக்குடி மாவட்ட சாலை போக்குவரத்து ஆய்வாளர் ஃபாத்திமா பார்வீன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து முத்தையாபுரம் காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணா ரமேஷ், மாணவர்களுக்கும் உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் சாலை விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பான ஓட்டுதல் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எதிர்வரும் வாகன ஓட்டுநர்களின் கண்களைப் பாதிக்காமல் இருக்க வாகனங்களில் ‘புல்ஸ் ஐ’ ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு இலவச ஹெல்மெட்டுகள் வழங்கப்பட்டன. இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், கார்களில் சீட் பெல்ட் பயன்படுத்துவது அவசியம் என்றும் சாலை போக்குவரத்து ஆய்வாளர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் பிரேம் சுந்தர், தலைமையாசிரியர் பாபு ராதாகிருஷ்ணன், ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம் தலைவர் பொன்னுசாமி, செயலாளர் விஷ்ணு பிரியா, மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory