» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா: அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் கோரிக்கை!

வெள்ளி 30, ஜனவரி 2026 5:31:26 PM (IST)


தூத்துக்குடியில் வர்த்தக மையம், தகவல் தொழில் நுட்ப பூங்கா, பிரிமியம் கல்வி நிறுவனங்கள் அமைக்க வேண்டும் என்று திமுக தேர்தல் தயாரிப்பு குழுவிடம் அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின்சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலியில் கனிமொழி எம்பி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் சார்பில் பொதுச் செயலாளர் சுரேஷ் குமார் மற்றும் முன்னாள் தலைவர் டி.ஆர். தமிழரசு ஆகியோர் அளித்த மனுவில், தூத்துக்குடியில் ஏர்கார்கோ ஹப் மற்றும் சர்வதேச விமான நிலையம்ஏற்படுத்துதல், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை டிரான்ஷிப்மெனட் துறைமுகமாக மேம்படுத்துதல், கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச் சாலையாக மேம்படுத்துதல், சென்னை – தூத்துக்குடி & தூத்துக்குடி – கன்னியாகுமரிஎட்டுவழிச் சாலையாக மேம்படுத்துதல், 

வடக்கு – தெற்கு பிரத்யேக இரயில்வே சரக்கு நடைபாதையை தூத்துக்குடி வரை நீட்டிக்க ஏற்பாடு செய்தல், ரயில்வே இருப்புப்பாதைக்கு இணையாக சாலை வசதி ஏற்படுத்துதல் (மீளவிட்டானிலிருந்து வாஞ்சி மணியாச்சி சந்திப்பு வரையிலான சாலை வசதி), கடல் நீரை நன்னீராக்கும் தொழிற்சாலை அமைத்தல், தூத்துக்குடியில் வர்த்தக மையம் அமைக்க ஏற்பாடு செய்தல்

தூத்துக்குடியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைத்தல், பிரிமியம் கல்வி நிறுவனங்கள், தூத்துக்குடியில் திறன் மேம்பாட்டு மையம், நவீன டிரக் டெர்மினல், தனி சுற்றுலா மையம், மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க், செயற்கை நுண்ணறிவு பூங்கா, ஃபின்-டெக், ஆராய்ச்சி மற்றும மேம்பாட்டு மையம், மருத்துவ தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையம், வேளாண்மை மற்றும் உயிரி தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும்.

பெரும் வெள்ளத்திற்கு நிரந்தரத் தீர்வு காணுதல், மேம்படுத்தப்பட்ட வடிகால் உள்கட்டமைப்பு,வெள்ளப்பெருக்கு மண்டலம் மற்றும் நில பயன்பாட்டு திட்டமிடல், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர் சேமிப்பு அமைத்தல், சமூக விழிப்புணர்வு மற்றும் கல்வி, ஓத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு, சிப்காட் சொத்து வரியின் இரட்டை வரியை நீக்க வேண்டும், 

தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்குதல், செங்கோட்டை மற்றும் புனலூர் வழியாக தூத்துக்குடியில் இருந்து, எர்ணாகுளத்திற்குஅதிவிரைவு ரயில் இயக்குதல், தூத்துக்குடி கிழக்கு கடற்கரை தீவில் இருந்து ராமேஸ்வரம் வரை கடல் சுற்றுலாத் தளம் அமைத்தல், தூத்துக்குடியில் கோளரங்கள் (Planetarium) அமைத்தல், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு இடையே நன்கு நிறுவப்பட்ட விளையாட்டு நகரத்தை கவர்ச்சிகரமான குழிப்பந்தாட்ட மைதானத்துடன் அமைத்தல் போன்ற கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன. 


மக்கள் கருத்து

என்ன பயன்Jan 30, 2026 - 09:11:54 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு ரயிலும் விடமாடிக்காங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory