» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவிகளின் கல்விச் சான்றிதழ் ஒப்படைப்பு: நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பு

வெள்ளி 30, ஜனவரி 2026 4:44:35 PM (IST)


தூத்துக்குடியில், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் 2 மாணவிகள் அளித்த புகாரையடுத்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை மாணவிகளிடம் ஒப்படைத்தது.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர், நடுவைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுடலைமணி மகள் கேமலா தேவி என்ற மாணவி தூத்துக்குடி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் முன்பாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு AIM Technical பயிற்சி மையத்தில் உள்ள எனது கல்வி அசல் சான்றிதழ்களான 10th, 11th & 12th marksheets,  Provisional certificate மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய 5 அசல் சான்றிதல்களை பெற்று தரவேண்டி மனு செய்திருந்தார். 

அந்த மனுவை இன்று 30.01.2026 விசாரணை செய்த நிரந்தர மக்கள் நீதிமன்றம், முதன்மை மாவட்ட நீதிபதி/தலைவர் ஆர்.வசந்தி மனுதாரர் மற்றும் Tamilnadu AIM Technical Training Centre அதிகாரிகளுக்கு அறிவிப்பு அனுப்பியதன் அடிப்படையில் இன்று இருதரப்பினரும் ஆஜர் ஆகினார்கள். விசாரணயில் மேற்படி கல்லூரி மாணவியின் அசல் கல்வி சான்றிதழ்களை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் முன்பாக மாணவியிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதன் மூலம் மாணவி கேமலா தேவி மனு முடித்துவைக்கப்பட்டது. 

இதுபோல் பேரூரணி கிராமத்தை சேர்ந்த ராஜா மகள் ஜெயா என்ற மாணவி திருநெல்வேலி மாவட்டம் மேலத்தெடியூரில் இயங்கி வரும் PSN Engineering கல்லூரியில் உள்ள எனது கல்வி அசல் சான்றிதழ்களான 10th, 11th & 12th marksheets,  Transfer certificate மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய 5 அசல் சான்றிதல்களை பெற்று தரவேண்டி மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் கல்லூரி அதிகாரிகளுக்கு அறிவிப்பு அனுப்பியதன் அடிப்படையில் இன்று இருதரப்பினரும் ஆஜர் ஆகினார்கள். 

விசாரணயில் மேற்படி கல்லூரி மாணவியின் அசல் கல்வி சான்றிதழ்களை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் முன்பாக மாணவியிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதன் மூலம் மாணவி ஜெயாவின் மனு முடித்துவைக்கப்பட்டது. மேலும் இதுபோன்ற கல்வி சம்மந்தமான பிரச்சனைகள், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு கொடுத்து எந்த வித கட்டணமும் இல்லாமல் தீர்வு காணலாம் என்று முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory