» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 30, ஜனவரி 2026 11:56:03 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் தொழுநோய் ஒழிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சமூக சமத்துவத்தையும் மனித கண்ணியத்தையும் வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் நாள் தியாகிகள் தினத்தன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், ஆணையர் பிரியங்கா முன்னிலையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமான இன்று தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, கோட்டு ராஜா, நிர்மல் ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கீதா, முருகேசன், ஜான், சரவணகுமார், முத்துவேல், வைதேகி, சரண்யா, ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









