» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி புதிய சாலை பணிகள் : கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.

வெள்ளி 30, ஜனவரி 2026 11:04:54 AM (IST)


தூத்துக்குடியிலிருந்து வாஞ்சிமணியாச்சி ரயில் நிலையம் வரை ரூ.198 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.198 கோடி திட்ட மதிப்பீட்டில் தூத்துக்குடியிலிருந்து வாஞ்சிமணியாச்சி ரயில்வே சந்திப்பு வரை புதிய சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடந்தது. 

விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். விழாவில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு புதிய சாலைக்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் அவர் பேசுகையில், இந்த சாலை அமைவதால் தூத்துக்குடியில் இருந்து வாகனங்கள் டோல் கேட்டை கடக்காமல், நேரடியாக வாஞ்சிமணியாச்சி ரெயில் நிலையம் செல்ல இயலும்.

இந்த சாலை 2 வழித்தட சாலையாகவும், 5 சாலை சந்திப்பு மேம்பாடுகளாகவும், 6 பஸ் நிறுத்த வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. இந்த சாலையால் ஜம்புலிங்காபுரம், சவரிமங்கலம், மேலபாண்டியாபுரம், பாறைக்குட்டம், மணியாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், மேலத்தட்டப்பாறை பகுதிகள் பெரிதும் பயன்பெறும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் எம்.சி. சண்முகையா, ஜி.வி.மார்க்கண்டேயன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் லிங்குசாமி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory