» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் : போலீஸ் குவிப்பு

வெள்ளி 30, ஜனவரி 2026 10:34:52 AM (IST)


தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணி ஒப்பந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை பணியை அவர்லேண்ட் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் துப்புரவு பணியாளர்கள் மீது தொழிலாளர் விரோத போக்கை கடைபிடித்து வருவதாக கூறி தூய்மை பணியாளர்கள் பலமுறை போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு அவர்லேண்ட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணி நிரந்தர சட்டத்தின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.  தமிழக அரசு ஆணைப்படி ஓட்டுனர்களுக்கு மாத ஊதியம் 24 ஆயிரத்து 90 ரூபாயும், தூய்மை பணியாளர்களுக்கு 20 ஆயிரத்து 460 ரூபாயும் வழங்க வேண்டும். பிஎப் பணத்தை அரசு விதிமுறைப்படி நிர்வாக பங்களிப்பு செய்ய வேண்டும். 

ஊதியத்துடன் வார விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ உபகரணங்கள், சீருடைகள், ரெயின் கோர்ட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பணியின் போது மரணம் அடைந்த தொழிலாளர்களுக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும். தொழிலாளர் நலனுக்காக பாடுபடும் தொழிற்சங்க நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போராட்டம் எதிரொலியாக மாநகராட்சி அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகரப் பகுதியில் துப்புரவு பணிகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory