» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாநில அளவில் தூத்துக்குடி முதலிடம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்

வெள்ளி 30, ஜனவரி 2026 8:01:33 AM (IST)



உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாநில அளவில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாக ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல சமூக நீதி விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ‘வாழ்க்கை வழிகாட்டி’ நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் இளம்பகவத் தலைமை தாங்கி பேசுகையில்,

பிளஸ்-2 மாணவர்கள் இப்போதே என்ன கல்லூரி தேர்ந்தெடுக்க போகிறோம்? எவ்வளவு மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதை தீர்மானித்து திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். எதையுமே விரைவாக கற்றுக் கொள்ளவும் மற்றும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை பெற்று விட்டால், வெற்றிகரமான வேலை வாய்பையும், நல்ல நிலையையும் அடைய முடியும். ஒவ்வொரு மாணவரும், பள்ளி படிப்பை முடித்து விட்டு, கல்லூரிக்கு கட்டாயம் செல்ல வேண்டும். எல்லோரும் உயர்கல்வியை பெற வேண்டும். அதனால் தான், உயர்வுக்கு படி, கல்லூரி கனவு உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நிகழ்ச்சிகளை அரசு முன்முயற்சி எடுத்து நடத்தி வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சிபெற்ற மாணவர்களில் 96.2 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்து படித்து வருகின்றனர். உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

எனவே, வாழ்க்கையில் முக்கியமான காலகட்டத்தில் உள்ள பிளஸ்-2 மாணவர்கள் எதிர்கால கல்வியை சரியாக திட்டமிட வேண்டும். மேலும் 10-ம் வகுப்பு மாணவர்களும், இப்போதே எதிர்காலத்தில் என்ன மாதிரியான பட்ட படிப்புகள் படிக்க உள்ளீர்கள் என்பதை திட்டமிட வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் 11ஆம் வகுப்பில் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல சமூக நீதி விடுதிகளில் தங்கி பயிலும் 10 மற்றும் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஆட்சியர் புத்தகம் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி ஆட்சியர் ஹூமான்ஷூ மங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தில்வேல் முருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செய்யது முகமது, எட்டயபுரம் தாசில்தார் சுபா மற்றும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education




Thoothukudi Business Directory