» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொள்ளை வழக்கில் திருநங்கைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 29, ஜனவரி 2026 8:34:48 PM (IST)
தூத்துக்குடியில் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தூத்துக்குடியைச் சேர்ந்த (திருநங்கை) வசந்தகுமார் (20/2026) என்பவர் கடந்த 09.11.2025 அன்று முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரை தாக்கி அவர் அணிந்திருந்த அணிகலன்கள் மற்றும் கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றார். இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை விரைவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் - II ல் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) விஜயராஜ்குமார் இன்று (29.01.2026) (திருநங்கை) வசந்தகுமார் குற்றவாளி என தீர்ப்பளித்து 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் காவல்துறையினரையும், அப்போதைய முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகலட்சுமி மற்றும் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் ஜானகி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்படி முத்தையாபுரம் காவல் நிலைய கொள்ளை வழக்கில் சம்பவம் நடைபெற்ற மூன்றே மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









