» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வியாழன் 29, ஜனவரி 2026 7:53:46 PM (IST)

தென்னகத்து பதுவை, கோடி அற்புதர் என மக்களால் அழைக்கப்படும் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் இறுதியில் தொடங்கும். இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளை மறைவட்ட அதிபர் பேராலய அருட்தந்தை அந்தோணிவியாகப்பன் தலைமையில் கொடி மந்திரிக்கப்பட்டு பின்னர் பவனியாக கொண்டு வரப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடைபெற்றது.
தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறும். 12-ம் திருநாளான பிப்ரவரி 9-ஆம் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. தொடர்ந்து தேர்பவனி நடைபெறும்.
13-ம் திருநாளான 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.45 மணிக்கு மதுரை மறைமாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. 11-ஆம் தேதி காலையில் கொடியிறக்க நன்றி திருப்பலி நடைபெறும்.
திருவிழாவில் தமிழகம் மற்றும் இன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை ஆலய அதிபரும், பங்குத்தந்தையுமான மோட்சராஜன், உதவி பங்குத்தந்தை சந்தியாகு, ஆன்மிக தந்தைகள் சகாயதாசன், பீட்டர் பிச்சைக்கண் மற்றும் அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
சனி 4, ஏப்ரல் 2026 5:29:04 PM (IST)

தேர்தலுக்காக வருபவர்களைப் புறக்கணிப்பீர் : தூத்துக்குடியில் கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 4:59:47 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.67 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
சனி 4, ஏப்ரல் 2026 4:24:07 PM (IST)

விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்!
சனி 4, ஏப்ரல் 2026 3:31:43 PM (IST)

தேர்தல் பார்வையாளர்களைச் சந்திப்பதில் சிக்கல்: தூத்துக்குடியின் மையப்பகுதிக்கு மாற்ற கோரிக்கை!
சனி 4, ஏப்ரல் 2026 3:23:57 PM (IST)

இலங்கை விசைப்படகு தீப்பற்றி எரிந்து நாசம் : தூத்துக்குடியில் பரபரப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 3:16:15 PM (IST)







