» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.2,292 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்
வியாழன் 22, ஜனவரி 2026 11:52:45 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.2,292 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் தொழில் பூங்கா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு முள்ளக்காடு கிராமத்தில், 2292.38 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு செயலாளர் வி. அருண் ராய், சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் கி. செந்தில்ராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி முள்ளக்காடு கடல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு இந்த பணிகளை கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிப்காட் செயற்பொறியாளர் கவிதா, திட்ட அலுவலர் செல்வராணி, மற்றும் சிப்காட் அலுவலர்கள் தனியார் நிறுவன அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கடல் நீரை நன்னீராகும் நிறுவனம் அடுத்த 2027 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் அதன் செயல்பாட்டை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர் இந்த நிறுவனம் மூலம் நாள் ஒன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கடல் நீர் நன்னீராக வழங்கப்பட உள்ளது இந்த தண்ணீர் முழுவதும் தூத்துக்குடி சுற்றியுள்ள பல்வேறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட உள்ளது இதன் மூலம் தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படும்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ வேட்பு மனு தாக்கல்
சனி 4, ஏப்ரல் 2026 7:06:36 PM (IST)

வி.வி.டி சிக்னல் பகுதியில் புதிய வடிவமைப்பில் பாலம் : அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் வாக்குறுதி!
சனி 4, ஏப்ரல் 2026 6:53:22 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
சனி 4, ஏப்ரல் 2026 5:29:04 PM (IST)

தேர்தலுக்காக வருபவர்களைப் புறக்கணிப்பீர் : தூத்துக்குடியில் கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 4:59:47 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.67 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
சனி 4, ஏப்ரல் 2026 4:24:07 PM (IST)

விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்!
சனி 4, ஏப்ரல் 2026 3:31:43 PM (IST)