» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காட்டுப்பன்றிகள் மீது பைக்குகள் மோதல்: 3 பேர் காயம்!
புதன் 17, டிசம்பர் 2025 8:06:20 AM (IST)
கயத்தாறு அருகே காட்டுப்பன்றிகள் மீது இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 3 மேளக்கலைஞர்கள் காயமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மேளக்கலைஞர் பொன்னுச்சாமி(63). இவரும், திருநெல்வேலி மாவட்டம் மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த சமுத்திரபாண்டி மகன் செல்லத்துரை(28), தெற்கு சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சுடலைமணி மகன் கண்ணன்(20) ஆகிய மேளக்காரர்களும், நேற்று கலியாவூருக்கு, 2 இருசக்கர வாகனத்தில் சென்றனராம்.
தேசிய நான்குவழிச்சாலையில் கயத்தாறு அருகே சன்னது புதுக்குடி பகுதியில் சென்றபோது, சாலையைக் கடந்த காட்டுப்பன்றிகள் மீது இருசக்கர வாகனங்கள் மோதியதாம். இதில், காயமடைந்த 3 பேரையும் கயத்தாறு போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










