» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கூட்டுறவு சார்-பதிவாளர்கள் பணியிடமாற்றம்: இணைப் பதிவாளர் உத்தரவு!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:15:38 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சார்-பதிவாளர்களை பணியிடமாற்றம் செய்து இணைப் பதிவாளர் ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி தூத்துக்குடி பொது விநியோகத் திட்ட சார்-பதிவாளராக பணியாற்றி வந்த அந்தோணிபட்டுராஜ் மாவட்ட நுகர்வோர் மொத்த கூட்டுறவு பண்டகசாலை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் சரக கூட்டுறவு சார்-பதிவாளராக பணியாற்றி வந்த இளன்மாறன் தூத்துக்குடி பொது விநியோகத் திட்ட கூட்டுறவு சார்-பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வந்த பாலமுருகன் ஸ்ரீவைகுண்டம் பொது விநியோகத் திட்ட சார்-பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் பொது விநியோகத் திட்ட சார்-பதிவாளராக பணியாற்றி வந்த பொன்மாரி தூத்துக்குடி துணைப் பதிவாளர் கள அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் உடனடியாக தங்களது பணியில் சே வேண்டும் என்றும் இணை பதிவாளர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)

பட்டினமருதூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் கள ஆய்வு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:30:06 PM (IST)










