» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் சஷ்டி வழிபாடு: திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:03:26 AM (IST)

காா்த்திகை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
காா்த்திகை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு சுவாமி விஸ்வரூபம் தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, அதைத்தொடா்ந்து பிற கால பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். மாலையில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தேவசேனா அம்மனுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி பிரகாரம் சுற்றிவந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கேரளா லாட்டரி சீட்டு விற்றவர் கைது
செவ்வாய் 16, டிசம்பர் 2025 8:02:13 AM (IST)

தந்தைக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு: மகன் கைது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 8:01:00 AM (IST)

கணவரை தாக்கிவிட்டு இளம்பெண் பலாத்காரம் : சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 7:58:06 AM (IST)

கணவரிடம் சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணைக்கு எதிர்ப்பு: தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 7:54:19 AM (IST)

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு நாள் மாற்றம்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 7:39:39 AM (IST)

தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் அலுவலகத்தில் எஸ்பி ஆய்வு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:18:01 PM (IST)










