» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பட்டினமருதூரில் பாதுகாக்கப்பட்ட குதிரை லாட பதிவுகள் கண்டெடுப்பு

வியாழன் 11, டிசம்பர் 2025 7:39:58 AM (IST)



தூத்துக்குடி அருகே பட்டினமருதூரில் பல பாதுகாக்கப்பட்ட குதிரை லாட பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தூத்துக்குடியடைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பெ.ராஜேஷ் செல்வரதி முன்னெடுப்பில் வேப்பலோடை-பனையூர் பகுதி கடல்சார் எச்சங்கள் மற்றும் பட்டினமருதூரில் அறிவிக்கப்பட்ட தொல்லியல் தளத்தைப் பார்வையிட, சுதாகர் தலைமையிலான  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குழுவினர் மற்றும் கடல்சார் உயிரியல் ஆய்வாளர் முனியாண்டி பாலு ஆகியோர் வந்தனர்.  அவர்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட அனைத்து கலைப்பொருட்களையும் கவனித்து குறித்துக் கொண்டனர். 

புல எண் 40ல் தொல்லியல் களம் பகுதியைப் பார்வையிட்டபோது,  தொல்லியல் பேராசிரியர் மதிவாணன் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் மீனா ஆகியோர் அருகருகே உள்ள வெவ்வேறு இடங்களில் குதிரை லாடத்தின் சில பதிவுகளை அடையாளம் கண்டனர். இதன் அருகே சுமார் 1.5அங்குலம் விட்டம் கொண்ட இரும்பு வளையம் மற்றும் அறுத்த சங்கினை தேய்க்க பயன்படும் தேய்ப்பு கல் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டன.
 
இந்தப் பாதுகாக்கப்பட்ட குதிரை லாடப் பதிப்பு இடங்களின் புவியியல் ஒருங்கிணைப்பு புள்ளிகளை நாம் இணைக்கும்போது, அவை நமது தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு முந்தைய நாட்களில் ஆவணப்படுத்தப்பட்ட பண்டைய சாலை அமைப்புகளுடன் நேரான கோட்டில் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மார்க்க போலோ தனது வரலாற்று பதிவுகள் வாயிலாக இந்த கீழ் பட்டினம் பகுதியின் தொழில்முறை, கலாச்சாரம், பண்பாடு, வானவியல் அறிவியல், செல்வ செழிப்பு, உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களின் பூமி, ஆண்டிற்கு 1400 குதிரைகள் இறக்குமதி என்ற பல்வேறு விடையங்களை நமக்கு தந்துள்ளார்.



எனவே இந்த பண்பட்ட குதிரைகளின் கால் தடம் பதிவுகள் நமக்கு 13ம் நூற்றாண்டின் மார்க்க போலோவின் குதிரை வணிக கூற்றிற்கு சான்றாக அமையுமா! அல்லது இன்னும் பின்னேக்கிய வரலாற்றிற்கு சான்றாக அமையுமா! என்பது முழுமையான தொல்லியல் மற்றும் பூகோள வியல் ஆய்விற்கு பின் தெரியவரும் என்றார்கள். இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவட்ட ஆட்சியர் வாயிலாக பரிந்துரை செய்யப்பட்ட பனையூர் கடல்சார் எச்சங்கள் பகுதி மற்றும் அறிவிக்கப்பட்ட பட்டினம் மருதூர் தொல்லியல் கள பகுதிகளை உடனடியாக முதலில் பாதுகாத்திட உத்தரவு பிறப்பிக்க வேண்டி அரசிற்கு தங்களது கோரிக்கைகளை பதிவு செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory