» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறித்த 2பேர் கைது : 18½ பவுன் நகைகள் பறிமுதல்!!
புதன் 3, டிசம்பர் 2025 4:51:24 PM (IST)

தூத்துக்குடியில் பெண்களிடம் நகை பறித்த வழக்குகளில் தொடர்புடைய 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 18½ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ரஹ்மத்துல்லா புரத்தைச் சேர்ந்த முருகன் மனைவி அமுதா (41). என்பவர் கடந்த 27ஆம் தேதி இரவு 9.50 மணியளவில் அங்குள்ள ஒரு கடையில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது மோட்டார் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் அமுதா கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றுவிட்டார்.
அன்றைய தினமே தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு டெலிபோன் காலனியைச் சேர்ந்த செல்வம் மனைவி கிறிஸ்டி (30) என்பவர் தனது மகனை டியூஷனில் இருந்து அழைத்து வருவதற்காக சென்றபோது அவர் அணிந்திருந்த கவரிங் செயினையும் பறித்துச் சென்றுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பாக புகாரின் பேரில் மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெண்களிடம் நகை பறித்தது பண்டாரம்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் பாரத் (22) எனத் தெரியவந்தது. மேலும் அவர் கடந்த அக்டோபர் மாதம் மாதவன் நகரைச் சேர்ந்த பேச்சிராஜா மனைவி சுப்புலட்சுமி (43) என்ற பெண்ணிடம் 15 பவுன் நகையை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் அளித்த தகவலின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் அஜித் குமார் (28) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
இதில் பாரத் பெண்களிடம் நகைகளை பறித்து அஜித்குமாரிடம் கொடுத்துள்ளார். அவர் அந்த நகைகளை விற்பனை செய்துள்ளார். அந்த பணத்தில் இருவரும் கேரளாவில் ஜாலியாக செலவு செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் கேரளா சென்று அவர்களை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 18.5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ வேட்பு மனு தாக்கல்
சனி 4, ஏப்ரல் 2026 7:06:36 PM (IST)

வி.வி.டி சிக்னல் பகுதியில் புதிய வடிவமைப்பில் பாலம் : அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் வாக்குறுதி!
சனி 4, ஏப்ரல் 2026 6:53:22 PM (IST)

தூத்துக்குடியில் தேர்தல் அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
சனி 4, ஏப்ரல் 2026 5:29:04 PM (IST)

தேர்தலுக்காக வருபவர்களைப் புறக்கணிப்பீர் : தூத்துக்குடியில் கீதா ஜீவன் வாக்கு சேகரிப்பு!
சனி 4, ஏப்ரல் 2026 4:59:47 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.67 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
சனி 4, ஏப்ரல் 2026 4:24:07 PM (IST)

விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல்!
சனி 4, ஏப்ரல் 2026 3:31:43 PM (IST)







