» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேவர் ஜெயந்தி விழா மாட்டு வண்டி எல்கை பந்தயம்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 9:10:01 PM (IST)

விளாத்திகுளம் அருகே புளியங்குளம் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்.
இதில், மதுரை, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 72 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன, போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழாக்கமட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் ஏராளமான பந்தய ரசிகர்கள் பந்தயத்தினை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தினை கிராம பொதுமக்கள் மற்றும் விளாத்திகுளம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










