» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கபடி வீரர்களுக்கு விளையாட்டுச் சீருடை வழங்கல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 9:09:37 PM (IST)

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கபடி வீரர்களுக்கு விளையாட்டுச் சீருடைகளை அதிமுக ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கபடி அணிகளுக்கு திருச்செந்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு மாநில அளவிலான கபடி அணிக்கு கபடி வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது. இப்போட்டியில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கபடி அணியும் பங்கேற்க உள்ளது.
இந்நிலையில், போட்டியில் பங்கேற்க உள்ள கபடி வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு விளாத்திகுளம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் இராமச்சந்திரன் கபடி விளையாட்டுச் சீருடைகளை அன்பளிப்பாக வழங்கி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். மாவட்ட அமெச்சூர் கபடி கழக விளாத்திகுளம் பொறுப்பாளர் தங்கதுரை, அதிமுக நகர செயலாளர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










