» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி அருகே வாளுடன் திரிந்த வாலிபர் கைது!
ஞாயிறு 2, நவம்பர் 2025 9:27:35 AM (IST)
கோவில்பட்டி அருகே ஒருவரை கொலை செய்வதற்காக வாளுடன் திரிந்த வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்பாண்டியன் தலைமையில் போலீசார், நேற்று மந்திதோப்பு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இந்திரா காலனியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்ட போது, அவரது முதுகின் பின்னால் சட்டையில் வாள் வைத்திருப்பது தெரியவந்ததாம்.
விசாரணையில், மந்திதோப்பு கணேஷ் நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுபனேஷ் என்ற சிவா (25) என்பதும், முன்பகை காரணமாக ஒருவரை கொலை செய்யும் நோக்கில் வாள் வைத்திருந்ததும் தெரியவந்ததாம். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து சிவாவை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










