» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன் வாங்க மக்கள் குவிந்தனர் : மீனவர்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 2, நவம்பர் 2025 9:24:33 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில், மீன் வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று கரை திரும்பிய நிலையில், மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. நேற்று விடுமுறை தினத்தையொட்டி மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதனால், ஏலக்கூடத்தில் மீனவர்களிடம் மீன்களை மொத்தமாக வாங்க வியாபாரிகள், மக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுத்து வாங்கிச் சென்றனர். சீலா மீன் கிலோ ரூ.1,000 முதல் 1,300 வரையும், பாறை மீன் ரூ.400, விளை மீன் ரூ.550 முதல் 650 வரையும், ஊளி மீன் ரூ.500 முதல் 550 வரையும், சூரை மீன் ரூ.200, கடவு இறால் ரூ.500-க்கும், சூப்பர் நண்டு ரூ. 700 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ.1,500 வரையும், ஐலேஷ் கிலோ ரூ.200 வரையும், நகரை ரூ.250 வரையும் விற்பனை செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










