» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எந்த மழை வந்தாலும் பொதுமக்களை பாதிக்காத அளவிற்கு நடவடிக்கை: அமைச்சர் கீதாஜீவன் தகவல்

ஞாயிறு 2, நவம்பர் 2025 9:08:08 AM (IST)



எந்த மழை வந்தாலும் பொதுமக்களை பாதிக்காத அளவிற்கு திமுக அரசு முன்னெச்சாிக்கை நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது என்று என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

தூத்துக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழையால் நிகிலேஷன் நகர், பி& டி காலனி, உள்பட தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. அந்த பகுதிகளை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் ரூரல் பகுதி அமைக்கப்பட்டபின் எவ்வீத கட்டமைப்பு பணிகளையும் முறையாக செய்யவில்லை. 

2021ல் திமுக ஆட்சி அமைத்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதி ஓதுக்கீடுசெய்தும் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் வரும் காலங்களில் தேங்கக்கூடாது பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிப்படைய கூடாது என்று கூறியதின் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 

மாநகராட்சி பகுதியில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை போல் இந்த ஆண்டு இதுவரை கூடுதலாக 9 சென்டி மீட்டா் வரை மழை பெய்துள்ளது. சில காலி மணைகளில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மற்றப்படி புதிய கால்வாய் வழித்தடங்கள் அமைக்கப்பட்டதின் வழியாக தண்ணீர் வௌியேறி சென்றுவிட்டது. சில பகுதிகளில் மட்டும் மின்மோட்டாா் மூலம் வௌியேற்றப்பட்டுள்ளன. கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் நன்மை அடைந்துள்ளாா்கள். 

எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போது தமிழகத்திற்கு அது தான் பொற்காலம். தமிழ்நாட்டில் தமிழா்களின் நலன் மட்டுமின்றி அனைவரின் உாிமையும் பாதுகாக்கப்படுகிறது. எந்த மழை வந்தாலும் இந்தமுறை பொதுமக்களை பாதிக்காத அளவிற்கு முன்னெச்சாிக்கை நடவடிக்கையை இந்த அரசு எடுத்துள்ளது. அதனால் பொதுமக்கள் எவ்வித அச்சப்பட தேவையில்லை என்று கூறினாா்.

ஆய்வின் போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலா்கள் கண்ணன், ஜான், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர்செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், வேல்முருகன், மணி அல்பட் உள்பட பலர் உடனிருந்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory