» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கொசு தொல்லை அதிகரிப்பு : மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
சனி 1, நவம்பர் 2025 8:17:50 PM (IST)
தூத்துக்குடி மாநகர் முழுவதும் கொசு தொல்லை அதிகரித்துள்ள நிலையில், கொசுக்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநகர செயலாளர் எம்எஸ் முத்து வெளியிட்ட அறிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் சில வார்டுகளில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்து. சில வார்டுகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த பருவகால வடகிழக்கு பருவ மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. சில காலி மணைகளில் நீர் பல ஆண்டுகளாக தேங்கி உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் மாநகர் முழுவதும் தற்போது கொசுகளின் உற்பத்தி தீவிரம் அடைந்துள்ளது. தெருக்களில் நடக்கக்கூட இயலவில்லை. வீட்டில் கொசுக்கடியால் மக்கள் நிம்மதியாக உறங்க முடியவில்லை.
கொசுவைக் போக்கிட எந்த கொசு ஒழிப்பான் மருந்தை பயன்படுத்தினாலும் கொசு போவதில்லை. இதனால், மக்கள் கடுமையான மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தெருக்களில் மாநராட்சி நிர்வாகம் கால்வாய் அடைப்புகளை சரி செய்து, மழைநீர் சீராக செல்வதற்கும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










