» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நவ.5ஆம் தேதி கொடியேற்றம்!
சனி 1, நவம்பர் 2025 8:17:39 AM (IST)
தூத்துக்குடி சிவன் கோவில், ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, வருகிற 5ஆம் தேதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் 10 மணிக்கு கொடியேற்றம் நடைபெறும். விழா நாட்களில் அம்மன் பித்தளை சப்பரம், கிளி வாகனம், அன்னபட்சி வாகனம், சிம்மவாகனம், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், கமல வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.
வருகிற 13ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். வரும் 14ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணிக்கு பாகம்பிரியாள் அம்மன் சிவபூஜை செய்யும் அலங்காரத்தில் பூப்பல்லக்கில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 15ம் தேதி சனிக்கிழமை இரவு 8:00 மணிக்கு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும். விழா நாட்களில் கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










