» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நவம்பர் 9ல் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல்: நீதிபதி ஜோதிமணி அறிவிப்பு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 9:36:57 PM (IST)
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல முதற்கட்ட தேர்தல் நவம்பர் 9ந் தேதி நடைபெறுவதாக திருமண்டல நிர்வாகி ஓய்வுபெற்ற நீதிபதி ஜோதிமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சேகர தலைவர்கள் மற்றும் திருமண்டல கல்வி நிறுவனத் தலைவர்களுக்கு நிர்வாகி ஜோதிமணி அனுப்பியுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: கடந்த 27.10.2025 தேதியிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சின் உத்தரவின்படி, நான் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகியாக பொறுப்பேற்று தேர்தல்களை கடந்த 03.09.2025 அன்று விட்ட இடத்திலிருந்து தொடர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளதைக் கருத்தில் கொண்டு, தேர்தலின் மறு அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது, விரைவில் உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும். புதிய தேர்தல் அட்டவணையின்படி, முதல் கட்டத் தேர்தலான திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் சேகர மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் 09.11.2025 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். அதற்கான அறிவிப்பு 02.11.2025 அன்று ஞாயிற்றுக்கிழமை ஆலய ஆராதனையின் போது இதை அறிவித்து அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
இதற்கிடையில், ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தகுதியான வாக்காளர்களின் பட்டியல் சரியான நேரத்தில் அனைத்து சபைகளுக்கும் அனுப்பப்படும் என திருமண்டல நிர்வாகி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










