» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத் தேர்தல் அலுவலகம் செயல்படத் துவங்கியது!
வெள்ளி 31, அக்டோபர் 2025 8:36:52 PM (IST)

நாசரேத்தில் திருமண்டல தேர்தல் அலுவலகம் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் இன்று முதல் செயல்பட தொடங்கியது.
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அருள்மேயர் உள்ளிட்ட சிலர், சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில் அவர்கள் நீதிபதி ஜோதிமணி தலைமையிலான நிர்வாகிகள் முதல்கட்ட தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் முடித்துவிட்டனர். தேர்தலை ரத்து செய்வதால் எங்களை போன்றவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தேர்தல் பணியை தொடர அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு கண்டுகொள்ளலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. அதன்பேரில் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த 27ம் தேதி வழங்கிய தீர்ப்பில், தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தொடரவும், தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டதோடு,சினாடு பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுவதாகவும் கூறினார்.
இதனையடுத்து இன்று ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தூத்துக்குடி திருமண்டல அலுவலகத்தில் திருமண்டல நிர்வாகியாக பொறுப்பேற்றார். ஏற்கனவே நியமித்திருந்த தேர்தல் அலுவலர்களான மாவட்ட நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம், வழக்கறிஞர் டி.ஏ.பிரபாகர் ஆகியோருடன் நாசரேத் ஆர்ட் தொழிற் பள்ளி விருந்தினர் மாளிகையில் அமைந்துள்ளது திருமண்டல தேர்தல் அலுவலகத்திற்கு இன்று மாலை வந்திருந்து தேர்தல் பணியை அதிரடியாகத் தொடங்கினார்.
அப்போது புதிய திருமண்டல நிர்வாக மேலாளராக இன்று பதவிப் பொறுப்பேற்றுள்ள தேவா காபிரியேல் ஜெயராஜன் உடனிருந்தார். இதனால் இன்னும் ஒரிரு நாளில் திருமண்டல முதல்கட்ட தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










