» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நீர்நிலைகள் பொது பாதையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 7:40:32 PM (IST)

கயத்தாறு தாலுகா நீர்நிலைகள் மற்றும் பொது பாதையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகாவில் உள்ள முடுக்கலான்குளம் கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தின் அருகே குருமலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஊருணிகள், நீரோடைகள் உள்ளது மட்டுமின்றி புள்ளி மான்கள், கடமான்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதிகளவில் மூலிகைகளும் உள்ளன. இந்த மலைச்சரிவு பகுதியில் முடுக்கலான்குளம் பகுதி மக்கள் தங்களது நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றன.
மேலும் கால்நடை வளர்ப்பு தொழிலும் செய்து வருகின்றனர் இப்பகுதியில் நிவ உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஊராட்சி சார்பில் ஊரணி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தனி நபர்கள் சட்டவிரோதமாக நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், ஊரணி பொது பாதை, குடிநீர் குழாய் ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிலம் வனம் நீநிலை பாதுகாப்பு குழு மற்றும் முடுக்கலாங்குளம் கிராம மக்கள் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










