» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: இன்றைய போட்டிகள் விபரம்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 3:31:25 PM (IST)
தூத்துக்குடியில் கல்லூரிகளுக்கு இடையேயான அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இன்று மாலை 4 போட்டிகள் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம், வ.உ.சி. துறைமுக ஆணையம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 15-வது அகில இந்திய அளவிலான கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 6 ஆண்கள் அணியும், 6 பெண்கள் அணியும் பங்கேற்று உள்ளன. இந்த போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது.
இன்றைய போட்டி அட்டவணை:
மாலை 5:00 மணி: மகளிர் பிரிவில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம் மற்றும் கோட்டயம் ஆல்போன்சா கல்லூரி அணிகள் மோதுகின்றன.
மாலை 6:30 மணி: ஆடவர் பிரிவில் சென்னை ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூரு கிறிஸ்ட் பல்கலைக்கழகம் அணிகள் மோதுகின்றன.
இரவு 8:00 மணி: மகளிர் பிரிவில் சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரி மற்றும் சாலக்குடி சேக்ரட் ஹார்ட் கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரவு 9:30 மணி: ஆடவர் பிரிவில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சூர் ஸ்ரீ கேரளா வர்மா கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










