» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் வரும் பக்தர்கள் அரசு பேருந்தை பயன்படுத்த வேண்டும்: காவல்துறை அறிவுறுத்தல்!
ஞாயிறு 26, அக்டோபர் 2025 2:00:12 PM (IST)
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் போது மழை பெய்தால் தனியார் வாகன நிறுத்துமிடங்களில் வாகனம் நிறுத்தம் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால் மாற்று ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மழை காலங்களில் தங்கள் தனியார் வாகனங்களை தவிர்த்து அரசு பேருந்தை பயன்படுத்தி பாதுகாப்பாக திருச்செந்தூர் வருமாறு மாவட்ட காவல்துறை சார்பாக அறுவுறுத்தப்படுகிறது.திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி வருகின்ற 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் நிறைவுபெறுகிறது.
இந்த கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக ஏற்கனவே திருச்செந்தூர் பகுதியில் 17 இடங்களில் பக்தர்களின் வாகன நிறுத்தங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திடிரென்று மழை பெய்து தனியார் வாகன நிறுத்துமிடங்களில் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு பதிலாக கீழ்கண்டவாறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திடிரென்று மழை அதிகமாக இருக்கும்பட்சத்தில் தூத்துக்குடி ரோட்டிலுள்ள ஜே.ஜே.நகர் பார்க்கிங்கில் குறைந்த அளவே வாகனங்களை நிறுத்த முடியும். எனவே அதற்கு மாற்று ஏற்பாடாக வீரபாண்டியபட்டிணம் to காயல்பட்டிணம் ரோட்டில் St.ஜோசப் பள்ளி அருகில் சோயா லேண்டில் அவசரகால வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் தூத்துக்குடி ரோட்டில் உள்ள ஐ.டி.ஐ வளாகத்தில் குறைந்த அளவிலான வாகனங்கள் நிறுத்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாழிக்கிணறு பகுதியில் கோவில் பெருந்திட்ட வளாக வேலைகள் நடைபெறுவதால் ரதவீதிகள் வழியாக நாழிக்கிணறு செல்ல அனுமதியில்லை.
திருநெல்வேலி ரோட்டில் ஷபி.டிரேடர்ஸ் எதிரே உள்ள வியாபாரி சங்க பார்க்கிங், அன்புநகர் பார்க்கிங் ஆகிய இடங்களில் மழை காரணமாக தனியார் வாகனங்கள் நிறுத்த இயலாத நிலை ஏற்பட்டால் அதற்கு மாற்று ஏற்பாடாக குமாரபுரம் தெருக்கள், ஆதித்தனார் கல்லூரி குடியிருப்பு அருகில், கிருஷ்ணாநகர் (காஞ்சி சங்கரா பள்ளி அருகில்) அருள்முருகன்நகர் மற்றும் செந்தூர்நகர் ஆகிய இடங்களில் வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி ரோட்டில் உள்ள வேட்டையாடும் மடம் அருகில் தற்காலிக பேருந்து நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, உவரி, குலசேகரபட்டிணம் மார்க்கமாக திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் தனியார் வாகனங்கள் ஆலந்தலை N.முத்தையாபுரம், செந்தூர் மினரல்ஸ் வாய்க்கால் பாலம் வந்து பரமன்குறிச்சி சாலையில் வலதுபுறம் திரும்பி FCI குடோன் அருகில் உள்ள பால்பாயாசம் அய்யர் land வாகன நிறுத்தம், சுந்தர் land வாகன நிறுத்தம், மற்றும் செந்தில்குமரன் பள்ளி வளாக வாகன நிறுத்தம் ஆகிய வாகன நிறுத்தங்களில் பக்தர்கள் தங்கள் தனியார் வாகனங்களை நிறுத்தவும். திரும்பி செல்லும் போது அதே வழித்தடம் வழியாக செல்லவும். கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகளுக்கு பால்பாயாசம் அய்யர் land-ல் தற்காலிக பேருந்து நிலையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மழை அதிகமாக பெய்யும்பட்சத்தில் காவல்துறை மேற்கொள்ளும் மாற்று ஏற்பாடுகளுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து உதவுமாறு காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறது. மேலும் பொதுமக்கள் மழை காலங்களில் தங்கள் தனியார் வாகனங்களை தவிர்த்து அரசு பேருந்தை பயன்படுத்தி பாதுகாப்பாக திருச்செந்தூர் வருமாறு மாவட்ட காவல்துறை சார்பாக அறுவுறுத்தப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










