» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகைகள் திருட்டு: 2பேர் கைது!

சனி 25, அக்டோபர் 2025 8:37:04 PM (IST)



தூத்துக்குடியில் அரசு பேருந்து டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.20 லட்சம்  மதிப்புள்ள நகைகளை திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி தங்க பரமேஸ்வரி காலனியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ராமகிருஷ்ணன் 57. இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பூமாரி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகள் சக்தி மாலா கோயம்புத்தூரில் கல்லூரியில் படித்து வருகிறார். ராமகிருஷ்ணன் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 16ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர் பின்னர் 17ஆம் தேதி காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 23.5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு 20 லட்ச ரூபாய் ஆகும். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார் 

விசாரணையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கார்த்திகைபுரம் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் மகன் பாண்டியன் (38), தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த சத்தியசீலன் மகன் பேரின்ப நாதன் (21) ஆகிய 2பேரும் நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து 2பேரையும் போலீசார் கைது செய்து 20 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory