» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் கந்த சஷ்டி விழா: சிகப்பு சாத்தி சுப்பிரமணிய சுவாமி ரத வீதி பவனி
சனி 25, அக்டோபர் 2025 8:21:55 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் 4ஆம் நாளான இன்று சிகப்பு சாத்தி சுப்பிரமணிய சுவாமி ரத வீதி பவனி நடைபெற்றது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி திருவிழா கடந்த22ம் தேதி தொடங்கியது.
இன்று 25ஆம் தேதி 4ம் நாள் திருவிழாவை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் தொடங்கி சிகப்பு சாத்தி அலங்கார தீபாரணைநடந்தது பின்னர் சப்பரத்தில் ரத வீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் முருகன் சன்னதியில் உள்ள வள்ளி தெய்வானைக்கு ஆறுமுக அர்ச்சனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பூஜையை சிவன் கோவில் பிரதான பட்டர்கள் செல்வம் மற்றும் சண்முகம் ஆகியோர் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 27-ஆம் தேதி அன்று நடைபெறும். கந்த சஷ்டி விழா ஏற்பாடுகளை ஸ்ரீசுப்பிரமணியசுவாமி மகமை பரிபலான சங்கத்தின் தலைவர் பிரமநாயகம், செயலாளர் எம்.எஸ்.எஸ். கந்தப்பன், துணைத் தலைவர் ராமலிங்கம், உதவிச் செயலாளர் தியாகராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










