» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே கந்த சஷ்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்: தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 25, அக்டோபர் 2025 7:33:03 PM (IST)
திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே வருகிற 27ஆம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வருகிற 27.10.2025 திங்கள்கிழமை அன்று திருச்செந்தூர்- திருநெல்வேலி இடையே ஒரு ஜோடி முன்பதிவு செய்யப்படாத பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி வருகிற 27 ந் தேதி திங்கட்கிழமை திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் வண்டி எண் 06106 திருச்செந்தூரிலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு இரவு 10.30 மணிக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் வண்டி எண் 06105 இரவு 11 மணிக்கு புறப்பட்டு அக்டோபர் 28 ந் தேதி நள்ளிரவு 12:30 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும்.
இந்த சிறப்பு ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டியுடன் கூடிய பெட்டிகள் என மொத்தம் 12 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










