» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில் நிலையத்தில் நீதிமன்ற ஊழியரிடம் பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
சனி 20, செப்டம்பர் 2025 8:34:37 AM (IST)
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நீதிமன்ற ஊழியரிடம் பணத்தைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் புது அப்பனேரியைச் சேர்ந்தவர் சேர்மன் சாமி மகன் அரிச்சந்திரன் (37). திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் உதவியாளராக வேலை பார்த்து வரும் இவர், அனந்தபுரி ரயிலில் திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி வந்தார்.
பின்னர், நடராஜபுரம் பகுதி தண்டவாளப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, 3 பேர் கொண்ட கும்பல் அவரது பர்ஸை பறித்துச் சென்றனராம். அதில், ஏடிஎம் அட்டை, ஆதார் மற்றும் ரூ.700 இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










