» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 20 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : வாட்ச்மேன் கைது

வெள்ளி 19, செப்டம்பர் 2025 8:00:13 PM (IST)



தூத்துக்குடியில் 20 கிலோ புகையிலை பொருட்களை கடத்தி வந்த தனியார் நிறுவன வாட்ச்மேனை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்ஜீவமணி தர்மராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், முகிலரசன், வடிவேல் தலைமை காவலர் ஜெகன் ஆகியோர் சுந்தர் நகர் பகுதியில்வாகன தணிக்கையில் ஈடுட்பட்டு கொண்டிருந்தபோது சந்தேகதிற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் கையில் பையுடன் வந்த நபரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, கூல் லிப், புகையிலை போன்ற தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் சுமார் 20 கிலோ இருந்தது. 

பின்னர் போதை பொருட்களை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர் விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடி சேர்ந்தவர் என்றும் அவர் முத்தையாபுரம் சுந்தர் நகரில் தங்கியிருந்து சிப்காட் வளாகத்தில் உள்ளஒரு கம்பெனியில் இரவு வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து இருக்கிறார் மேலும் பகல் நேரத்தில் புகையிலை வியாபாரமும் செய்து வந்துள்ளார் என்று தெரியவந்தது பின்னர் அவரை கைது செய்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory