» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
வெள்ளி 19, செப்டம்பர் 2025 7:50:31 PM (IST)

தீபாவளிக்கு முன்பாக போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையை இழுத்தடிக்காமல் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளியின் 30 ஆண்டுக்கும் மேலான சேமிப்புகளையும், ஓய்வுக்காலப் பணப் பயன்களையும் வழங்காமல் 24 மாதங்களுக்கு மேலாக இழுத்தடிப்பதை கைவிட்டு தீபாவளிக்கு முன்பாகவாவது வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) தொழிலாளர்களும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் இணைந்து கடந்த 33 நாட்களாக தமிழகம் முழுவதும் 22 இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










