» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு அலுவலகங்களில் தூய்மை இயக்கம் 2.0 : ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:13:25 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை இயக்கம் 2.0 மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று தூய்மை இயக்கம் 2.0 மூலம் அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டார்கள். தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல முன்னெடுப்புகளில் தற்போது கழிவு மேலாண்மையில் ஒரு சிறப்பு முன்னெடுப்பாக தூய்மை இயக்கத்தினை தொடங்கி அதனை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் உள்ள தேவையில்லாத கழிவுகளை சேகரித்து அகற்றும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், அலுவலகத்தை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்ள அலுவலகத்தில் கோப்புகள் மற்றும் பொருட்கள் சரியான முறையில் வைத்துக்கொள்வதற்கும் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதற்காக அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










