» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்: ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்டார்

வெள்ளி 19, செப்டம்பர் 2025 3:09:28 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை  தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர்  க.இளம்பகவத் வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (19.09.2025) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026ன் கீழ் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படியும், தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலாளர் பொது (தேர்தல்கள்) துறை, சென்னை அவர்களின் கடித எண் 5000.தேர்தல்-1-2025-11, நாள்.12.09.2025ன்படியும் தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுவரையறை செய்வது தொடர்பாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 06.01.2025 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வாக்குச்சாவடிகள் விவரம் பின்வறுமாறு உள்ளது. 


இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி ஒரு வாக்குச்சாவடிக்கு 1200 வாக்காளர்களை மட்டும் அனுமதிக்கும் பொருட்டு, வாக்குசாவடிகளில்  வாக்காளர்களின் எண்ணிக்கை 1200-க்கு மேல் இருப்பின் அவற்றினை பிரித்து புதிய வாக்குச்சாவடிகள் அமைத்திடப்படவுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை விபரம் பின்வருமாறு உள்ளது.

            
வாக்குச்சாவடி இடமாற்றம்,  கட்டிட மாற்றம்,  பெயர் மாற்றம், பிழை திருத்தம்,  பிரிவு மாற்றம் ஆகிய பணிகளும் மேற்க்கொள்ளப்படவுள்ளது. அதன் விபரம்  பின்வருமாறு        


இந்த விபரப்படி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் முன்மொழிவுகள் பெறப்பட்டு, தலைமை தேர்தல் அலுவலர் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, ஒப்புதல் பெற முன்மொழிவுகள் சமர்பிக்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து 01.01.2026 தகுதி நாளாக கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் -2026 மேற்கொள்ள கால அட்டவணை வரப்பெற்றவுடன்   சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,   தெரிவித்தார். 

முன்னதாக, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,  மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டார். 
         
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சேதுராமலிங்கம், உதவி ஆட்சியர் (பயிற்சி) தி.புவனேஷ் ராம்,  வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, தெற்கு மாவட்ட (திமுக) அக்னல், மாவட்ட துணை செயலாளர் (தி.மு.க.) ஆறுமுகப் பெருமாள், மத்திய ஒன்றிய செயலாளர் (தி.மு.க.) ஜெயக்கொடி, வடக்கு மாநகர செயலாளர் (தி.மு.க) எஸ்.ஆர்.ஆனந்த சேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆம் ஆத்மி கட்சி வே.குணசீலன், வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. என்.ஜி.ராஜேந்திரன், சிபிஐ (எம்) டி.ராஜா, பாரதிய ஜனதா கட்சி சிவராமன், வடக்கு மாவட்ட (தி.மு.க) ஐ.ரவி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர், அ.இ.அ.தி.மு.க. பி.சரவணபெருமாள், வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி செந்தில்குமார், மாவட்ட கழக பொருளாளர் (தே.மு.தி.க.) விஜயன், காங்கிரஸ் தெற்கு மாவட்டம் முத்துமணி, தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சகாயராஜா, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ஆ.ரமேஷ் பாபு மற்றும் அரசு உயர்அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory