» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொடர்ந்து தடம் மாற்றி இயக்கப்படும் பேருந்துகள் : பணிமனை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 12:15:56 PM (IST)

பேருந்துகள் தொடர்ந்து தடம் மாற்றி இயக்கப்படும் நிலையில், பணிமனை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேர்வைக்காரன்மடம் ஊராட்சி பொதுமக்கள் வலியுறுத்தியுள்னர்.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பணிமணையில் இருந்து சேர்வைக்காரன்மடம் ஊராட்சி வழியாக இயக்கப்படும் பேருந்து எண் 578 ஆகும். கடந்த செப்டம்பர் 9 ம் தேதி அதிகாலை நெல்லை வழியாக நாகர்கோவில் செல்லுவதற்கு இதே பேருந்து 578 மாற்றி அனுப்பியுள்ளார். மேற்படி பேருந்து கிருஷ்ணாபுரம் கடந்து வந்து கொண்டிருந்துள்ளது.
அதில் கொங்கராயக்குறிச்சியை சேர்ந்த வடிவேல் என்பவர் பஸ்சை ஓட்டிவந்துள்ளார். ஆச்சிமடத்திற்கும், ஆரோக்கியநாதபுரத்திற்கும் இடையே பஸ் வந்தபோது, விபத்து நடந்து பஸ் கவிழ்ந்து உள்ளது. மேற்படி இதன் காரணமாகவும் பணி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி வழியாக இயக்கப்படும் பேருந்து 147 A 19/9/2025 இன்று காலை நிறுத்தப்பட்டு வேறு இடத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. ஏற்கனவே பலமுறை இதே பேருந்து நிறுத்தப்பட்டும் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் பகுதிக்கு இயக்கப்பட்டு வந்ததன்பேரில் பொதுமக்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மக்களை அவமதித்து சேர்வைக்காரன்மடம் ஊராட்சி தடத்தில் உள்ள பேருந்துகளை மாற்றி, கழிவறிக்கை செய்ய உள்ள ஓட்டை உடைசல் பேருந்துகளை இப்பகுதியில் இயக்கி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது ஆகும். ஏற்கனவே திருநெல்வேலியில் உள்ள உயர் அதிகாரிகளை பெண் உட்பட இளைஞர்கள் நேரில் சந்தித்து இந்நிலை குறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது.
பணி மேலாளர் செய்கையால் காலை வேலை பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் வியாபாரிகள் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. பள்ளிக்கு செல்லும் ஏழை குழந்தைகளின் நிலை பேருந்து இயக்கபடாததால் நடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் படிப்பு தடைபெறுகிறது. காலாண்டு தேர்வு நடைபெறும் இந்த சமயத்தில் 147 பேருந்தை நிறுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மாவட்ட ஆட்சியர் மாணவ மாணவிகள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்படும் நிலையில் தொடர்ந்து செயல்படும் திருவைகுண்டம் பணி மணை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்று பஸ் இயக்கபடாத வீடியோ ஆதாரம் உள்ளது. திருவைகுண்டம் பணிமனையில் இருந்து சேர்வைக்காரன்மடம் ஊராட்சி வழியாக இயக்கப்படும் அனைத்துபேருந்துகள் தரமானதாகவும் பேருந்து எண் முகப்பில் எழுதபடவேண்டும்.
சரியான நேரத்தில் இயக்கபடவேண்டும்.இந்நிலை நீடித்தால் பொதுமக்கள் மாணவர்கள் வியாபாரிகள் மூலம் திருவைகுண்டம் பணிமணை நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் மறியல் போராட்டம் விரைவில் நடைபெறும். பல முறை மனு அளித்தும் திருவைகுண்டம் பணி மேலாளர் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)











M BabuSep 20, 2025 - 06:53:29 PM | Posted IP 162.1*****