» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிக்னலில் நின்ற வாகனங்கள் மீது கார் மோதி விபத்து : கோவில்பட்டியில் பரபரப்பு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:31:33 AM (IST)

கோவில்பட்டியில் அதிவேகமாக வந்த கார் போக்குவரத்து சிக்கனல் நின்று கொண்டிருந்த வாகனம் மோதியதில் அடுத்தடுத்து நின்ற வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் அதிக போக்குவரத்து உள்ள இடங்களில் ஒன்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதி. எப்போதும் இந்த பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் சென்று வரும். இந்நிலையில் எட்டயபுரம் சாலையில் இன்று அதிவேகமாக வந்த கார் ஒன்று வ உ சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அடுத்துள்ள தனியார் மண்டபம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு வைக்கப்பட்டிருந்த போக்குவரத்து தடுப்பினை தூக்கி வீசியது
மேலும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த ஒரு கார் மீது மோதியது. இதனால் அங்கு நின்றிருந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் 3 கார்கள், 2 லோடு ஆட்டோக்களுக்கு லேசான சேதம் ஏற்பட்டது. அதி வேகமாக வந்த கார் மோதியதில் போக்குவரத்து சிக்னலில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










