» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செப்.7ல் முழு சந்திர கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க வாய்ப்பு: அஸ்ட்ரோ கிளப் தகவல்

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:06:05 AM (IST)

வருகிற 7-ஆம் தேதி நடைபெறும் முழுசந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் கருத்துக்களை பல்வேறு நிகழ்வுகள் மூலம் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 7-ஆம் தேதி இரவு வானில் முழு சந்திரகிரகணம் நடக்கிறது. 

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வு ஆகும். இந்த நிகழ்வை நாம் வெறும் கண்களால் பார்க்கலாம். கிரகணங்கள் வெறும் நிழல்களின் விளையாட்டுதான். இந்த நிகழ்வு மனிதர்கள், விலங்குகள் அல்லது உணவு பொருட்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது.

வருகிற 7-ஆம் தேதி இரவு சந்திரன் பூமியின் நிழலால் சுமார் 85 நிமிடங்களுக்கு முழுமையாக மறைக்கப்படும். இதனால் முழு சந்திர கிரகணம் ஏற்படும். பகுதி கிரகண கட்டத்தில் சந்திரன் மேலும், மேலும் மறைக்கப்படுவதை நாம் காணலாம், முழு கிரகணத்தின் போது சந்திரன் உண்மையில் அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும். அன்று இரவு 8.58 மணிக்கு சந்திரன் முதலில் பூமியின் மங்கலான பிரணம்ப்ரல் புற நிழல் பகுதிக்குள் நுழையும். இதை நம் கண்களால் பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கும். 9.57 மணிக்கு இருண்ட அம்ப்ரல் கருநிழல் பகுதிக்குள் நுழையும். 

இதனை நம் கண்களால் மிக எளிதாக காணலாம். 11.01 மணி முதல் 8-ஆம் தேதி அதிகாலை 12.33 வரை சந்திரன் முழுமையாக மறையும். நமது வளிமண்டலத்தில் இருந்து சூரிய ஒளி விலகுவதால் சந்திரன் வானத்தில் இருந்து முழுமையாக மறைவதற்கு பதிலாக அடர்சிவப்பு நிறத்தை கொண்டு இருக்கும். அதிகாலை 1.26 மணிக்கு சந்திரன் கருநிழல் பகுதியை விட்டு முழுவதுமாக வெளியேறும். அதிகாலை 2.25 மணிக்கு புறநிழல் பகுதியை விட்டு வெளியேறும். இந்த கிரகணங்களை பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும். மேலும் அடுத்த சந்திரகிரகணம் 2028-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி நிகழும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory