» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் 3பேர் கைது: பரபரப்பு வாக்குமூலம்

செவ்வாய் 2, செப்டம்பர் 2025 8:02:45 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே செந்திலாம்பண்ணையில் தொழிலாளி கொலையில்3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள தோழப்பன் பண்ணையை சேர்ந்தவர் தர்மர் (42). கூலி தொழிலாளியான இவர் கடந்த 30-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் தோழப்பன்பண்ணையில் நடைபெற்ற கோவில் கொடை விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மர்மநபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை, சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், அவரை பத்மநாபமங்கலம், பசும்பொன் நகர் சங்கரசுப்பு மகன் ஆண்டியா என்ற ஆண்டிகுமார் (23), புதுப்பட்டி பண்டாரம் மகன் பிரேம்குமார் (23), செந்திலாம்பண்ணை செல்வ விநாயகம் மகன் அரசு முத்து (19) ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அந்த 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், சம்பவத்தன்று தோழப்பன்பண்ணை கொடைவிழாவையொட்டி அதிகாலை 1 மணி அளவில் சாமியாட்டம் நடந்தது. 

அப்போது ஆண்டியா மது அருந்திய நிலையில் குத்தாட்டம் போட்டான். இதை ஊர் மக்கள் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவனும், கூட்டாளிகளான மற்ற 2பேரும் வீட்டுக்கு சென்று அரிவாளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றோம். அப்போது எதிரே வந்த தர்மர், அவரை எதற்காக இவ்வளவு வேகமாக போகிறீர்கள்? என்று கூறி கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ெசன்றோம், என தெரிவித்தனர். 

பின்னர் கைதான 3 பேரும் ஸ்ரீவைகுண்டம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அந்த 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory