» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூத்த பெருமக்கள் உரிமை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் : அமைச்சரிடம் கோரிக்கை!

திங்கள் 1, செப்டம்பர் 2025 5:45:48 PM (IST)



மூத்த பெருமக்கள் உரிமை ஆணையத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மூத்த பெருமக்கள் நல இயக்கம் நிறுவனர் கௌரவ செயலாளர் ஆ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாடு மூத்த பெருமக்கள் நல இயக்க நிறுவனரும், எம்பவர் இந்தியா சமூக செயல்பாட்டுக் குழு கௌரவ செயலாளருமான ஆ.சங்கர் தமிழ்நாடு மூத்த பெரு மக்கள் உரிமை ஆணையம் 2025 சட்ட முன்வரைவை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் அவர்களிடம் வழங்கினார். 

மேலும் அவர் அமைச்சரிடம் அளித்த மனுவில், "தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் மூத்த பெருமக்கள் 13.7 சதவீதம் உள்ளனர். இந்தியாவிலேயே மூத்த பெருமக்கள் அதிகமாக வாழும் இரண்டாவது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. எனவே மூத்த பெருமக்களின் உரிமைகளை காப்பதற்காகவும், அவர்களின் நலம் பேணுவதற்காகவும் தமிழ்நாடு மூத்த பெருமக்கள் உரிமை ஆணையத்தை உடனடியாக தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மூத்த பெருமக்கள் நல இயக்கம் மற்றும் எம்பவர் இந்தியா சமூக செயல்பாட்டுக் குழு ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு மூத்த பெரு மக்கள் உரிமை ஆணையம் 2025 (சட்ட முன்வரைவு) Draft of the Tamil Nadu Elders Rights Commission Act 2025 வெளியிடப்பட்டது.

மூத்த பெருமக்களின் மேம்பாட்டுக்காக பணியாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் முதலமைச்சர் விருது, ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம்.

முதுமையின் விளைவாக ஏற்படும் மறதி நோய், பக்கவாதம் மற்றும் மூட்டு நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தாலுகா அளவில் தொடர் சிகிச்சை மையங்களை தமிழக அரசு தொடங்க வேண்டுகிறோம். மூத்த பெருமக்கள் இல்லங்களின் தரத்தை நிர்ணயிக்க ஒரு குழுவை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டுகிறோம்.

மூத்த பெருமக்களுக்காக நகர்ப்புறங்களில் மட்டுமில்லாமல் கிராமப் புறங்களிலும் முதியோர் இல்லங்களை அரசு ஆரம்பிக்க வேண்டும். மூத்த பெருமக்களுக்காக அனைத்து மாவட்டங்களிலும் பகல் நேர ஓய்வு மையங்களை (Day Care Center) அரசு ஆரம்பிக்க வேண்டுகிறோம். 60 வயதைக் கடந்த அனைத்து மூத்த பெருமக்களுக்கும் நிமோனியா தடுப்பூசியை போட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory