» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முழு சந்திர கிரகண செயல் விளக்கப் பயிற்சி
திங்கள் 1, செப்டம்பர் 2025 4:05:44 PM (IST)

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் முழு சந்திர கிரகண செயல் விளக்க பயிற்சி நடந்தது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் வருகிற 7ம் தேதி இரவு நடைபெற உள்ள முழு சந்திர கிரகணத்தை முன்னிட்டு பள்ளி கல்லூரி மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது. இதில் செப் - 7ம் தேதி இரவில் வானில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிகழ்வு முழு சந்திர கிரகண நிகழ்வாகும். இந்நிகழ்வினை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காண்பதற்கு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் கோவில்பட்டி காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். பள்ளி பொருளாளர் வள்ளுவன்,தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் மாவட்ட செயலாளர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி அனைவரையும் வரவேற்றார்.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில செயற்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் ரமேஷ், முனைவர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு முழு சந்திர கிரகண நிகழ்வினை செயல் விளக்கத்துடனும்,தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிடுவது குறித்தும் பயிற்சி அளித்தனர். இதில் மாணவர்களுக்கு முழு சந்திர கிரகண விழிப்புணர்வு வால்போஸ்டர்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










