» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுற்றுலா விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

திங்கள் 1, செப்டம்பர் 2025 4:03:36 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா விருதுகள் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாவில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாளுபவர்களுக்கு 45 சுற்றுலா விருதுகள் 17 பல்வேறு வகையான தலைப்புகளில் சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  

இவ்விருதுகள் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 27-ஆம் நாள் வழங்கப்பட்டு வருகிறது.  அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலாவிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம் சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத்தலம், பல்வேறு பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் அமைப்பாளர், சிறந்த கூட்ட சுற்றுலா அமைப்பாளர், சமூக ஊடகங்களில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவர் மற்றும் சிறந்த சுற்றுலா வழிகாட்டி போன்ற விருதுகள் வழங்கப்படும்.

எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்களை www.tntourismawards.com என்ற இணையத்தளத்தின் மூலம் 15-09-2025 -க்குள் விண்ணப்பிக்கலாம்.  மேலும், கூடுதல் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை 0461-2341010, 73977 15690 என்ற தொலைபேசி எண்ணிலும் மற்றும் மின்னஞ்சல் முகவரி [email protected]  மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட சுற்றுலா அலுவலர் தெரிவித்துள்ளார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital





Thoothukudi Business Directory