» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3.5 கோடி மதிப்புள்ள பீடி இலைகள், மாத்திரைகள் பறிமுதல்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 8:26:54 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3.5 கோடி மதிப்புள்ள பீடி இலைகள், வலி நிவாரணி மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மரைன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்துக்கு கிடைத்த தகவலின் படி தூத்துக்குடி கிழக்குக் கடற்கரை சாலை, வெள்ளப்பட்டி தருவைக்குளம் ரோட்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தருவைகுளம் - வெள்ளப்பட்டி இடையேயான கடற்கரை சாலையில் வந்த மினி லாரி, போலீசாரைக் கண்டதும் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த ஓட்டுநா் இறங்கி தப்பியோடிவிட்டாா்.
சந்தேகமடைந்த போலீசார், மினி லாரியை சோதனை செய்த போது, அதில் 9 பண்டல்களில் வலி நிவாரணி மாத்திரைகள், தலா 35 கிலோ எடை கொண்ட 72 பண்டல்களில் சுமாா் 2,500 கிலோ பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து, சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
வலி நிவாரணி மாத்திரையின் இலங்கை மதிப்பு ரூ.3 கோடி என்றும், பீடி இலை ரூ.50 லட்சம் என்றும் கூறப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இது தாெடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










