» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க சட்டம் இயற்ற வேண்டும் : டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
திங்கள் 1, செப்டம்பர் 2025 8:14:55 AM (IST)
தூத்துக்குடி தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்களில் தென் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்படும் தொழிற்சாலைகள், ஏற்கனவே தொடங்கப்பட்ட தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், அதற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்.பொட்டலூரணியில் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் மீன்கழிவு ஆலைகளை மூட வலியுறுத்தி செப்டம்பர் மாதம் 30-ந் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 250 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
அதில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் யாரும் எடுக்கப்படவில்லை. அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களையும் பணியில் சேர்க்கவேண்டும். அப்படி சேர்க்கப்பட்டு இருந்தால், அதற்கான ஆதாரத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
அமெரிக்கா இந்தியா மீது விதித்து உள்ள 50 சதவீதம் வரிவிதிப்பு என்பது ஒரு யுத்தம் ஆகும். இது இந்தியாவின் இறையான்மை, கவுரவம் சார்ந்த விஷயம். இந்த விஷயத்தில் இந்தியா துணிந்து நிற்க வேண்டும். சுங்கச்சாவடியில் பெரிய மோசடி நடக்கிறது. இது குறித்தும் ஒரு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும், என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










