» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
திங்கள் 1, செப்டம்பர் 2025 8:10:03 AM (IST)
தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல், பீராவை உடைத்து ரூ.40 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி கதிர்வேல் நகரில் அமைந்துள்ள செயின்ட் ஜான்ஸ் கிறிஸ்தவ ஆலயத்தில் ஏராளமான மக்கள் வந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பிரார்த்தனைக்கு பிறகு ஆலயத்தை பூட்டிவிட்டு சென்றார்களாம். நேற்று காலையில் ஆலயத்தை திறந்த போது, உண்டியலும், பீரோவும் உடைக்கப்பட்டு சுமார் ரூ.40 ஆயிரம் பணத்தை மர்ம நபர் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்த ஆலயத்தை சேர்ந்த ஜேசன் தர்மராஜ் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் சம்பவ பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, நேற்று அதிகாலையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ஆலயத்தின் பின்புறம் உள்ள கதவை திறந்து உள்ளே நுழைந்து, நிதானமாக தரையில் அமர்ந்து உண்டியலை உடைத்து திருடியது தெரியவந்தது தொடர்ந்து அந்த வாலிபரை சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)

நாசரேத்தில் எஸ்.டி.கே. அணி சபை மன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றி: எஸ்.டி.கே. ராஜன் பாராட்டு!!
வியாழன் 18, டிசம்பர் 2025 4:35:48 PM (IST)
_1766054627.jpg)
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலத்திற்கான விதிமுறைகள் : காவல்துறை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:13:52 PM (IST)










